/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'
அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'
அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'
அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'
ADDED : மே 07, 2010 01:56 AM

ராமநாதபுரம்: பரமக்குடியில் அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் பந்தலில், அரசு பஸ்சின் "போர்டு' வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே அ.தி.மு.க., சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு குடிநீர் டிரம்மை, அறந்தாங்கி செல்லும் "345 ஏ ' எண் கொண்ட அரசு பஸ்சின் பெயர் பலகையை வைத்து மூடி உள்ளனர். அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய இந்த பலகை, அரசியல் கட்சியின் குடிநீர் பந்தலுக்கு, வந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.